திங்கள், 2 டிசம்பர், 2013
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
உன்னைத்தான் தேடுகிறேன் ...ஆ
தேடல் –ஆ
வற்றிப்போன முலையோடு பெற்றெடுத்த குழந்தையின் பசிக்கு பால் கொடுக்க
முடியாமல் பரிதவிக்கும் தாயின் நிலை கண்டு பக்கத்து வீட்டுப்பெண் தன முலைப்பாலை
பகிர்ந்தளித்து, தன பத்துக்குழந்தைகளுக்கும்
முதல் பாலாய் தன முலைப்பாலை கொடுத்து அத்தனை குழந்தைகளுக்கும் உடல்
ஆரோக்கியத்தை கொடுத்து தாய்மையின் பாசத்தை
காத்து நேசத்தை வளர்த்து வந்த இந்த சமுதாயத்தில்... இன்று அனைத்து
குழந்தைகளிடத்தும் அன்பை பகிர்ந்து வாழும் அரசியாய் வாழ வேண்டிய பெண், மரத்திற்கு
மரம தாவும்போது தவறி விழுந்த குட்டிக்குரங்கை தன இனத்தோடு சேர்க்காத
தாய்குரங்கைப்போல முமமூன்று வருடத்தில் மூலியாகப்போகும் தன உடலின் அழகுக்காக,
மூன்று குழந்தைகளுக்கு கொடுக்குமளவுக்கு தன்னிடம் முலைப்பால் இருந்தும் தன
குழந்தைக்கே தர மறுக்கும் பேய்மை குணத்தோடு கொண்டாட்டம் போடும் கூட்டத்தில் தாய்மை
குணத்தோடு தத்தளிக்கும் உன்னைத்தேடுகிறேன், உன்னை மட்டுமே தேடுகிறேன்.
பிறப்பை மட்டுமே பெற்று வாழ்வது துறவறம். பிறப்பையும், இறப்பையும் ஏற்று
வாழ்வது இல்லறம். துறவியாக வாழ நினைப்போருக்கு தொடர்ச்சியும் இல்லை முடிவும் இல்லை
அருவியைப்போன்றது இவர்களது வாழ்க்கை. இல்லறத்திற்கு பிறப்பை கொடுக்கும் பெண்ணும்
இறப்பை கொடுக்கும் ஆணும இணைந்து வாழ்வதற்கு பெயர்தான் இல்லறம். இன்றைய
சமுதாயத்தில் இருளை நீக்கும் நிலவை தொடுமளவிற்கு இல்லங்கள் பெருகிவிட்டன அறம்தான்
அழிந்து போயக்கொண்டிருக்கிறது. பதவியின் பொறுப்பையும், வெறுப்பையும்
பணியிடத்தில் செலுத்திவிட்டு, அதிகாரத்தின் உரிமையையும் பெருமையையும் அலுவலகத்தோடு
விட்டு விடாமல், பறவையின் சிறகுகளுக்குள் பதவி போட்டி வந்தால், இரவுக்கும்
பகலுக்கும் பணியில் போட்டி வந்தால்,மண்ணுக்கும் மரத்துக்கும் மன வேறுபாடு வந்தால்,
நீரும் மீனும் நேசம் இழந்தால், உரிமையும் உறவும் கர்வம் கொண்டால்,பொறுமையும்
பெறுமையும் வெறுமையாகிப்போனால், போலித்தனமும் போட்டிக்குண்மும் நாட்டியமாடினால்,
கட்டழகும் கட்டில் கதைகளும் பிறர காட்சிப்பொருளாக மாறிவிட்டால்,
விட்டுக்கொடுத்தலுக்கும் வீண் பிடிவாததுக்கும் வேறுபாடு தெரியாமல் போனால்,
வரவையும் செலவையும் வரிசைப்படுத்தாமல் போனால், உறவையும் உரிமையையும் உணராமல்
போனால், பட்டப்படிப்பு படித்தென்ன பயன்? பணக்குவியல் இருந்தென்ன பயன்?
கல்லறையாகத்தான் போகும் இல்லறம்! இப்படி கல்லறையாக
நாறிக்கொண்டிருக்கும் சமுதாயசாக்கடைக்குள் சந்தனமாக மனம் வீசும்
உன்னைத்தேடுகிறேன், உன்னை மட்டுமே தேடுகிறேன்.
விடியற்காலையில் விரகதாப
இசையை கதறும் கைபேசியின் அலறலைக்கேட்டு கண்விழித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு
கறந்த பாலில் அனைத்து சத்துக்களையும் பிரித்தெடுத்து பணமாக்கிவிட்டு, மிச்சமான
கழிவு நீரை கண்ணைப்பறிக்கும் பாக்கெட்டுகளில் நிரப்பி விற்கப்படும் பாக்கெட் பாலில்
உருவான காப்பியை உறுஞ்சி குடித்துவிட்டு, முண்ணுறு ரூபாய் சூவையும், இருநூறு
ரூபாய் கால்சட்டையும், இருநூறு ரூபாய் பனியனும் நூரூரூபாய் தொப்பியும் அணிந்து
கொண்டு நான்கு கிலோமீட்டர் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, மாமிசத்தை
கொத்திதிண்ணும் கழுகைப்போன்ற மூக்குகளைக்கொண்ட டூத் பிரஸ்ஸில் விளம்பரங்களால்
வெற்றி பெற்ற நிறுவனங்களின் நச்சுத்தன்மை வாய்ந்த நான்கு பேஸ்ட்டுகலில ஒன்றை
எடுத்து பல் துலக்கிவிட்டு, முடியின் வறட்சியை தடுக்க, முடியில் பொடுகுகளை தடுக்க,
முடிகளின் உடைப்பை தடுக்க, முடிகளில் உண்டாகும் நரையைத்தடுக்க அமிலன்களால் உருவான
சியாம்புவில் ஒன்றை எடுத்துக்கொண்டு, உடலில் அரிப்பை தடுக்க, அலர்ஜியை தடுக்க,
நறுமணத்தை வெளிப்படுத்த அழிவுத்தன்மை கொண்ட நான்குவகையான சோப்புகளில் ஒன்றை
எடுத்துக்கொண்டு நீருக்குள் விழுந்த வெளியே வந்த பூனை சிலிர்த்துக்கொள்ளும்போது
சிதறும் நீர்த்துளிகளைப்போல சவரிளிருந்து விழும் நீரில் குளித்துவிட்டு வறண்டு போன
தலையில் வாசனை எண்ணையையும், ஒடுங்கிப்போன முகத்தில் ஒப்பனையும் முடித்துக்கொண்டு
குளிர்சாதனப்பெட்ட்யில் இரண்டு நாட்களாக குடிருக்கும் மாவில் உருவாக்கப்பட்ட உணவை
சாப்பிட்டுவிட்டு உளுத்துப்போன வாசனையை தடுக்க வாய்க்குள் வாசனைத்திரவியத்தை
தெளித்துவிட்டு, வாசலில் நிற்கும் புழுதி படிந்த நான்கு வாகனத்தில் ஒன்றின்
இருக்கையை மட்டும் கிழிந்த துணியால் துடைத்துவிட்டு அலுவலகம் புறப்படும்
ஆட்டுமந்தை கூட்டத்துக்கு நடுவே......
தேடல் தொடரும்....
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
உன்னைத்தான் தேடுகிறேன்...அ
தேடல்—1
அதிகாலையில் அகப்பட்டதை உணவாக கொடுத்து அழுக்கு
மூட்டைகளை முதுகில் ஏற்றி தன் கழுதையை ஆற்றுக்கு
ஓட்டிச்செல்வதைப்போல தன் குழந்தைகளின் முதுகில் புத்தகச்சுமையை ஏற்றி
பள்ளிக்கு அனுப்பும் நவீன நாகரீக பெற்றோர் கூட்டத்தின் நடுவே
மறைந்திருப்பாயோ என்று உன்னை அங்கும் தேடுகிறேன்.தமிழக மக்களை தற்குறிகள் ஆக
விடமாட்டேன் என்று ஊருக்கு ஒரு பள்ளி(கோயிலை)கூடத்தை திறக்க பாதையோரம் பிச்சை
எடுக்கவும் தயார் என்று சொல்லி ஊரெங்கும் பள்ளிகளைத்திறக்க காரணமான காலம் சென்ற
முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாட்டில் வீதியெங்கும் வீற்றிருக்கும்
டாஸ்மார்க் கடைகளுக்குள் போதைக்கு அடிமையானவர்கள் அணிவகுத்து செல்வதைப்போல தங்கள்
ஒழுக்கத்தையும், வலிமையான வாழ்க்கை சிறப்புகளையும் சீர்கேடுக்க சிவப்புக்கம்பலம்
விரித்து காசுக்காக கல்வியை விபசார விடுதிகளாக்கி விளம்பரப்படுத்தும் கான்வென்ட்
கல்விச்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட சின்னஞ்சிறு சிறார்களின் மத்தியில் உன் சிவந்த
முகத்தை தேடுகிறேன். படிப்பை சொல்லிக்கொடுக்க
ஒரு கட்டணம், பள்ளி வளச்சிக்கு ஒரு கட்டணம், பேருந்துக்கு ஒரு கட்டணம், பிள்ளைகள்
தவறு செய்தால் பெற்றோருக்கு ஒரு கட்டணம், விழாவிற்க்கு ஒரு கட்டணம்,
வீட்டுப்பாடத்தை செய்யாமலிருந்தால் ஒரு கட்டணம், சீருடைக்கு ஒரு கட்டணம்,
சிறப்புத்தேர்வுக்கு ஒரு கட்டணம், கல்வி சுற்றுலாவுக்கு ஒரு கட்டணம் கடன்
வாங்கியாவது இந்த கட்டணங்களை செலுத்தி தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ளும்
பெற்றோரிடம் வாங்கிய கட்டுகட்டான பணத்தில், சொற்பத்தொகையை சம்பளமாக பெற்ற
வேதனையில் கடமைக்காக இல்லாமல் கடனுக்காக கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு முன்னால்,
பெற்றோரின் போலி கௌரவத்தின் புகழுக்காகவும், கல்வி நிறுவனக்களின் பணப்பேயின் பசியை
தீர்க்கவும், கடனுக்காக கத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கர்ஜனைக்கு
கட்டுப்பட்டவர்களாக, ஆற்றுக்குள் அகமகிழ்ந்து நீந்தி
விளையாடும் மீன்குஞ்சுகளைப்போல, வானில் சிறகு விரித்து பறக்கும்
சிட்டுக்குறிவிகளைப்போல, வனத்தில் துள்ளிக்குதித்து விளையாடும் மான்குட்டிகளைப்போல,
நந்தவனத்தில் நளவெண்பா பாடும் குயில்களைப்போல அனைத்தையும் இழந்து அடிமைகளாக
அமர்ந்திருக்கும் அப்பாவிகளின் மத்தியில் உன்னை இப்பாவி தேடுகிறேன். தன் பிறப்பை பணயம் வைத்து ஒரு
மழலையின் பிறப்புக்கு உயிர் கொடுத்த தாய், அந்த மழலை அம்மா என்று சொன்ன முதல்
வார்த்தைக்கு ஆயிரம் முத்தங்களை அள்ளித்தந்த தாய், மலடி எனும் மரண வார்த்தையை
உடைத்தெறிய ஒரு குழந்தையை பெற்ற தாயும், உழைத்து களைத்துப்போய் வீடு வந்த தந்தையை
பார்த்து அறைகுறையாய் அப்பா என்று அழைத்தவுடன் அத்தனை சோர்வுகளும் பறந்து போய்
சொர்க்கத்துக்கே செல்லும் தந்தை, சொகப்புயலில் சிக்கித்தவிக்கும்போது தன்
சின்னஞ்சிறு மழலையின் கிளிப்பேச்சை கேட்டவுடன் மலையளவு தைரியத்தை மனதிற்குள் உருவாக்கிக்கொள்ளும் தந்தையும் இன்று எதிகாலத்தில் அனுப்விக்கத்துடிக்கும் ஆடம்பர வாழ்க்கைக்காக,
நிகழ்காலத்தில் தங்கள் பிள்ளையை ஆங்கில பள்ளியில் அடமானம் வைத்த கூட்டத்துக்குள்
உன்னைத்தேடுகிறேன் உன்னை மட்டுமே தேடுகிறேன். தேடல் தொடரும்....
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
உன்னைத்தேடுகிறேன்....
உன்னைத்தான் தேடுகிறேன் உன்னை மட்டுமே தேடுகிறேன்.பாறைக்குள் பதுங்கியிருக்கும் தேரையைப்போல படித்தவர் கூடினாலும், பாமரர் கூடினாலும் கூட்டத்துக்குள்ளே உன்னைத்தேடுகிறேன். தேய்ந்துபோன தேகம் கலைத்துப்போகும்போது புறக்கண்களை மூடி புரண்டு படுத்தாலும் அகக்கண்கள் உனைத்தேடியே அலைபாய்கின்றன இறந்தவர்களை புதைக்க இடமில்லாமலும் எதிர்கால வாழ்க்கைக்கு வழி தெரியாமலும் விடுதலைக்காக விரக்தியோடு காத்திருக்கும் இலங்கைத்தமிழ் மக்களைப்போல. அதோ நடக்க முடியாமல் நாலு திசைகளிலும் நன்மை செய்துகொடிருக்கிறதே அந்த பச்சைமரங்கள் அவைகளை நாற்றாக நடும்போது காற்றோடு வந்த உன் சுவாசம் என் சிந்தனை சிறகோடு வளர்ந்துகொண்டே வாழ்கிறது நட்டுவைத்த நாற்றுகள் எல்லாம் மரமாகி மக்களுக்கு சேவை செய்யும்போது நீ மட்டும் மறைந்து போனது மகா தவறல்லவா. தவறிப்போன குழந்தைக்காக தாய் தவமிருப்பதைப்போல சுயநலம் கொண்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை தேடி அலைமோதும் மழை வெள்ளத்தைபோல பொழுது புலர்ந்து பொழுது மறையும் வரை வண்டுகள் தேடும் மலர்களைப்போல தன் சுய தேவைகளையும், சுகபோக கூடங்களையும் இந்த மனித சமுதாயத்திற்குள் நான் உன்னைத்தேடுகிறேன்.... உன்னை மட்டுமே தேடுகிறேன்.
தேடல் தொடரும்...
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)