தேடல் –ஆ
வற்றிப்போன முலையோடு பெற்றெடுத்த குழந்தையின் பசிக்கு பால் கொடுக்க
முடியாமல் பரிதவிக்கும் தாயின் நிலை கண்டு பக்கத்து வீட்டுப்பெண் தன முலைப்பாலை
பகிர்ந்தளித்து, தன பத்துக்குழந்தைகளுக்கும்
முதல் பாலாய் தன முலைப்பாலை கொடுத்து அத்தனை குழந்தைகளுக்கும் உடல்
ஆரோக்கியத்தை கொடுத்து தாய்மையின் பாசத்தை
காத்து நேசத்தை வளர்த்து வந்த இந்த சமுதாயத்தில்... இன்று அனைத்து
குழந்தைகளிடத்தும் அன்பை பகிர்ந்து வாழும் அரசியாய் வாழ வேண்டிய பெண், மரத்திற்கு
மரம தாவும்போது தவறி விழுந்த குட்டிக்குரங்கை தன இனத்தோடு சேர்க்காத
தாய்குரங்கைப்போல முமமூன்று வருடத்தில் மூலியாகப்போகும் தன உடலின் அழகுக்காக,
மூன்று குழந்தைகளுக்கு கொடுக்குமளவுக்கு தன்னிடம் முலைப்பால் இருந்தும் தன
குழந்தைக்கே தர மறுக்கும் பேய்மை குணத்தோடு கொண்டாட்டம் போடும் கூட்டத்தில் தாய்மை
குணத்தோடு தத்தளிக்கும் உன்னைத்தேடுகிறேன், உன்னை மட்டுமே தேடுகிறேன்.
பிறப்பை மட்டுமே பெற்று வாழ்வது துறவறம். பிறப்பையும், இறப்பையும் ஏற்று
வாழ்வது இல்லறம். துறவியாக வாழ நினைப்போருக்கு தொடர்ச்சியும் இல்லை முடிவும் இல்லை
அருவியைப்போன்றது இவர்களது வாழ்க்கை. இல்லறத்திற்கு பிறப்பை கொடுக்கும் பெண்ணும்
இறப்பை கொடுக்கும் ஆணும இணைந்து வாழ்வதற்கு பெயர்தான் இல்லறம். இன்றைய
சமுதாயத்தில் இருளை நீக்கும் நிலவை தொடுமளவிற்கு இல்லங்கள் பெருகிவிட்டன அறம்தான்
அழிந்து போயக்கொண்டிருக்கிறது. பதவியின் பொறுப்பையும், வெறுப்பையும்
பணியிடத்தில் செலுத்திவிட்டு, அதிகாரத்தின் உரிமையையும் பெருமையையும் அலுவலகத்தோடு
விட்டு விடாமல், பறவையின் சிறகுகளுக்குள் பதவி போட்டி வந்தால், இரவுக்கும்
பகலுக்கும் பணியில் போட்டி வந்தால்,மண்ணுக்கும் மரத்துக்கும் மன வேறுபாடு வந்தால்,
நீரும் மீனும் நேசம் இழந்தால், உரிமையும் உறவும் கர்வம் கொண்டால்,பொறுமையும்
பெறுமையும் வெறுமையாகிப்போனால், போலித்தனமும் போட்டிக்குண்மும் நாட்டியமாடினால்,
கட்டழகும் கட்டில் கதைகளும் பிறர காட்சிப்பொருளாக மாறிவிட்டால்,
விட்டுக்கொடுத்தலுக்கும் வீண் பிடிவாததுக்கும் வேறுபாடு தெரியாமல் போனால்,
வரவையும் செலவையும் வரிசைப்படுத்தாமல் போனால், உறவையும் உரிமையையும் உணராமல்
போனால், பட்டப்படிப்பு படித்தென்ன பயன்? பணக்குவியல் இருந்தென்ன பயன்?
கல்லறையாகத்தான் போகும் இல்லறம்! இப்படி கல்லறையாக
நாறிக்கொண்டிருக்கும் சமுதாயசாக்கடைக்குள் சந்தனமாக மனம் வீசும்
உன்னைத்தேடுகிறேன், உன்னை மட்டுமே தேடுகிறேன்.
விடியற்காலையில் விரகதாப
இசையை கதறும் கைபேசியின் அலறலைக்கேட்டு கண்விழித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு
கறந்த பாலில் அனைத்து சத்துக்களையும் பிரித்தெடுத்து பணமாக்கிவிட்டு, மிச்சமான
கழிவு நீரை கண்ணைப்பறிக்கும் பாக்கெட்டுகளில் நிரப்பி விற்கப்படும் பாக்கெட் பாலில்
உருவான காப்பியை உறுஞ்சி குடித்துவிட்டு, முண்ணுறு ரூபாய் சூவையும், இருநூறு
ரூபாய் கால்சட்டையும், இருநூறு ரூபாய் பனியனும் நூரூரூபாய் தொப்பியும் அணிந்து
கொண்டு நான்கு கிலோமீட்டர் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, மாமிசத்தை
கொத்திதிண்ணும் கழுகைப்போன்ற மூக்குகளைக்கொண்ட டூத் பிரஸ்ஸில் விளம்பரங்களால்
வெற்றி பெற்ற நிறுவனங்களின் நச்சுத்தன்மை வாய்ந்த நான்கு பேஸ்ட்டுகலில ஒன்றை
எடுத்து பல் துலக்கிவிட்டு, முடியின் வறட்சியை தடுக்க, முடியில் பொடுகுகளை தடுக்க,
முடிகளின் உடைப்பை தடுக்க, முடிகளில் உண்டாகும் நரையைத்தடுக்க அமிலன்களால் உருவான
சியாம்புவில் ஒன்றை எடுத்துக்கொண்டு, உடலில் அரிப்பை தடுக்க, அலர்ஜியை தடுக்க,
நறுமணத்தை வெளிப்படுத்த அழிவுத்தன்மை கொண்ட நான்குவகையான சோப்புகளில் ஒன்றை
எடுத்துக்கொண்டு நீருக்குள் விழுந்த வெளியே வந்த பூனை சிலிர்த்துக்கொள்ளும்போது
சிதறும் நீர்த்துளிகளைப்போல சவரிளிருந்து விழும் நீரில் குளித்துவிட்டு வறண்டு போன
தலையில் வாசனை எண்ணையையும், ஒடுங்கிப்போன முகத்தில் ஒப்பனையும் முடித்துக்கொண்டு
குளிர்சாதனப்பெட்ட்யில் இரண்டு நாட்களாக குடிருக்கும் மாவில் உருவாக்கப்பட்ட உணவை
சாப்பிட்டுவிட்டு உளுத்துப்போன வாசனையை தடுக்க வாய்க்குள் வாசனைத்திரவியத்தை
தெளித்துவிட்டு, வாசலில் நிற்கும் புழுதி படிந்த நான்கு வாகனத்தில் ஒன்றின்
இருக்கையை மட்டும் கிழிந்த துணியால் துடைத்துவிட்டு அலுவலகம் புறப்படும்
ஆட்டுமந்தை கூட்டத்துக்கு நடுவே......
தேடல் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக