வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

உன்னைத்தேடுகிறேன்....

   உன்னைத்தான் தேடுகிறேன் உன்னை மட்டுமே தேடுகிறேன்.பாறைக்குள் பதுங்கியிருக்கும் தேரையைப்போல படித்தவர் கூடினாலும், பாமரர் கூடினாலும் கூட்டத்துக்குள்ளே உன்னைத்தேடுகிறேன். தேய்ந்துபோன தேகம் கலைத்துப்போகும்போது புறக்கண்களை மூடி புரண்டு படுத்தாலும் அகக்கண்கள் உனைத்தேடியே அலைபாய்கின்றன  இறந்தவர்களை புதைக்க இடமில்லாமலும் எதிர்கால வாழ்க்கைக்கு வழி தெரியாமலும் விடுதலைக்காக விரக்தியோடு காத்திருக்கும் இலங்கைத்தமிழ் மக்களைப்போல. அதோ நடக்க முடியாமல் நாலு திசைகளிலும் நன்மை செய்துகொடிருக்கிறதே அந்த பச்சைமரங்கள் அவைகளை நாற்றாக நடும்போது காற்றோடு வந்த உன் சுவாசம் என் சிந்தனை சிறகோடு வளர்ந்துகொண்டே வாழ்கிறது நட்டுவைத்த நாற்றுகள் எல்லாம் மரமாகி மக்களுக்கு சேவை செய்யும்போது நீ மட்டும்  மறைந்து போனது மகா தவறல்லவா. தவறிப்போன குழந்தைக்காக தாய் தவமிருப்பதைப்போல சுயநலம் கொண்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை தேடி அலைமோதும் மழை வெள்ளத்தைபோல பொழுது புலர்ந்து பொழுது மறையும் வரை வண்டுகள் தேடும் மலர்களைப்போல தன் சுய தேவைகளையும், சுகபோக கூடங்களையும் இந்த மனித சமுதாயத்திற்குள் நான் உன்னைத்தேடுகிறேன்.... உன்னை மட்டுமே தேடுகிறேன்.

                                    தேடல் தொடரும்...   

கருத்துகள் இல்லை: