ஞாயிறு, 21 மே, 2017

வாய்ச்சொல்லில் வீரரடி

MKM




தமிழகத்தின் சிஸ்டம் கெட்டுவிட்டது என்ற ரஜினிகாந்தின் ஒரு வாசகம் தமிழக அறிவு ஜீவிகளான பத்திரிக்கையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் சமூக ஆர்வலர்கள் முன்னாள் அரசு அதிகாரிகள் பொருளாதார நிபுனர்கள் பெண்கள் நல ஆர்வலர்கள் என தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்ட இவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்? வேசதாரிகளுக்கு வெண்சாமரம் வீசுவதால் இவர்களுக்கு பலன் பறிபோய்விடும் என்பதாலா? அல்லது மலிவான அரசியலில் மரத்துப்போன மக்களை ஊடகம் வழியாக உறங்க வைக்க தாலாட்டு பாடும் தரங்கெட்ட தன்னலவாதிகளின் வருமானமும்
சுயவிளம்பரமும் சுடுகாட்டுக்கு போய்விடும் என்பதாலா? இவர்களெல்லாம் உறங்குவதற்கு ஒழுங்கான வீடில்லாதவனொரு கட்சியால் கவுன்சலாராகி ஊழல்வாதியாகும்போது அவனது  உள்ளாசமாளிகை முன்பு ஒன்று கூடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊழல்வாதியை ஓட ஓட விரட்டிவிட்டு,
இன்று கட்சிக்காரகளை வைத்து  குளங்களை தூர்வார்பவர்கள்  ஆட்ச்சியில் இருந்த பொது குளங்களை எல்லாம் பட்டா போட்டு பணம் பார்த்தார்களே அப்போது குளங்களுக்கு நடுவே நின்று போராடி குளங்களை மீட்டெடுத்துவிட்டு,
சிறிது இடைவேளைக்கு பிறகு பேசுவோம் எங்கேயும் வேறுபக்கத்திற்கு போயிடாதீங்க இடைவேளையில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்.
           ஒரு குடிகாரனிடம்
கேள்வி; ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பீங்க?
பதில்; அளவெல்லாம் கிடையாது.
கேள்வி; உங்கள் குடும்பம் பற்றி?
பதில்; அம்மா அப்பா மனைவி இரு குழந்தைகள்
கேள்வி; என்ன வேலை பார்க்கறீங்க?
பதில்; குடிச்சிருந்தாலும் பரவாயில்லை வா என்று அழைத்தால் போவேன்.
கேள்வி; அப்படிஎன்றால் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு?
பதில்; அதுதான் அரசு இலவச அரிசி கொடுக்கிறதே.
கேள்வி; மற்ற சமையல் பொருட்களுக்கு?
பதில்; சம்சாரத்தின் வருமானம்.
கேள்வி; வீட்டு வாடகை?
பதில்; அரசே இலவச வீடு கொடுத்திருக்கே.
கேள்வி; பிள்ளைகளுக்கு படிப்பு மற்ற தேவைகள் ?
பதில்; அரசு பள்ளியில் இலவச கல்வி இருக்கு, நோட்டுப்புத்தகம் இலவசமா தர்றாங்க,
காலை மதியம் உணவு கொடுக்கிறாங்க,
நாப்கின் கொடுக்குறாங்க, பள்ளி தூரமா இருந்தா பஸ் பாஸ் கொடுக்கிறாங்க
பஸ்சே இல்லைன்னா சைக்கிள் கொடுக்கிறாங்க,
 கம்ப்யூட்டர் கொடுக்கிறாங்க,
உலக விசயங்களை அறிந்துகொள்ள இலவச டிவி கொடுத்திருக்காங்க, மருத்துவம் பார்க்க அரசு இலவச ஆஸ்பத்தரி இருக்கு,
பெரு வியாதின்னா அரசு இலவச மருத்துவ மருத்துவ காப்பீட்டு அட்டை இருக்கு,
வீட்டுல படிக்கும்போது களைப்படையாமல்  இருக்க மின்விசிறி இலவசமா அரசு கோத்திருக்கு,
அதற்க்கு தேவையான மின்சாரத்துக்கு 1௦௦ யூனிட் மின்சாரம் இலவசமா கொடுக்குது.
கேள்வி; நீங்கள் குடிப்பதற்கு பணம்?
பதில்; அம்மாவுக்கு 1500 அப்பாவுக்கு 1500 ரூபாய் முதியோர் பென்சன் அரசு கொடுக்கிறது அம்மாவின் பென்சனை நான் வாங்கிகொள்வேன்.
கேள்வி; உங்களின் குடிப்பழக்கத்தை பார்க்கும் உங்கள் பிள்ளைகள் தங்கள் தந்தையை தாழ்வாக நினைக்காதா? அதனால் அவர்கள் படிப்பு பாதிக்காதா?
பதில்; நான் தந்தை இல்லை. தந்தை என்பவன் யார்? தனது தாய் தந்தை மனைவி பிள்ளைகள் இவர்களின் கடந்த கால கனவுகளையெல்லாம் புதைத்துவிட்டு போராடும் போராளி அப்படிப்பட்ட எனக்கு போதுமான பொருளாதார வளச்சிக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல், பெரும்பான்மை பெறுவதர்க்காக மக்கள் பிரதிநிதிகளை பணம் கொடுத்து வந்குவதைப்போல அரசு மதுக்கடைகளின் மூலம் மதுவை கொடுத்து ஒரு தந்தையின் பதவியை தானே எடுத்துக்கொண்டது.
கேள்வி; இதனால் அரசுக்கு என்ன லாபம்?
பதில்; உண்மையை பேச முடியாது, உரிமையை கோர முடியாது, ஊழலை எதிர்க்க முடியாது,
கேள்வி; இதை தெரிந்த உங்களைப்போன்றவர்கள் குடியை விட்டுவிடலாமே/
பதில்; தலையணை மந்திரத்தை தவிர்ப்பதற்காக தவ வாழ்வுக்கு போக  யாரால் முடியும்.
கேள்வி; அப்படிஎன்றால் இதற்க்கு தீர்வு?
பதில்; திருந்த முடியாதவர்களாக எங்களை அடிமைப்படுத்திய அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் அழிக்கும் பொதுநலவாதிகளாக உங்களைப்போன்ற சுயநலவாதிகள் மாறவேண்டும்.
கேள்வி; பண்டிகை செலவுகளுக்கு பணம்?
பதில்; பொங்கலுக்கு அரசு இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கரும்பு கைச்செலவுக்கு பணம் கொடுக்கிறது.
மனைவியின் சேமிப்பு பற்றாக்குறைக்கு  கடன்.
கேள்வி; கடனை எப்படி அடைப்பீர்கள்?
பதில்; தேர்தல் வரும்போது.
கேள்வி; ஓட்டுக்கு பணம் பெறுவது தவறில்லையா?
பதில்; பணம் இல்லாதவன் வாங்குகிறான். பணம் இருப்பவன் ஓட்டுக்கு பணம் கொடுப்பவனை ஓட ஓட விரட்டலாமே ஆனால் பணவசதி படைத்தவனும் எனக்கு என் கொடுக்கவில்லை என்றுதானே கேட்கிறான் அதனால்தான் சுயநலவாதிகளான உங்களைப்போன்றவர்கள் பொதுநலவாதிகளாக மாறினால் மட்டுமே மாற்றம் வரும்.
இதை விடுத்து குளிர்ந்த அறையில் கூலாங்கற்களாக குறை மட்டுமே கூறிக்கொண்டிருதால் ரஜினியும் முதலமைச்சர் ஆவார் ரம்பாவும் முதலமைச்சர் ஆவார்.


 

கருத்துகள் இல்லை: