டெல்லியில்
நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக கேஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதியில்
அனைவருக்கும் குடிநீர் தேவையை போக்குவது, மின்சாரகட்டனத்தை பாதியாக குறைப்பது
ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக
ஊடகங்கள் மாறி மாறி பாராட்டுகின்றன. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் கேஜ்ரிவால்
தமிழக அரசியல்வாதிகளின் வழியில் அடியெடுத்து வைத்து தமிழக பாணியில் ஆட்சி நட்த்தப்போகிறாரோ
என ஐயம் எழுகிறது.
தமிழக நியாய விலைக்கடைகளுக்கு குறைந்த விலைக்கு
வழங்கப்பட்ட அரிசியை மக்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு விலையை அரசு ஏற்றுக்கொள்வது
சிறந்த நிர்வாகம் ஆகாது. மத்திய அரசு ஒரு கிலோ அரிசி இரண்டு ருபாய்க்கு தந்தால
வெளி
மார்க்கெட்டில் கிலோ அரிசி ஐந்து ருபாய்க்கு
விற்க
வைப்பதுதான் சிறந்த அரசு நர்வாகமாக இருக்க முடியும்.அதைப்போல
டெல்லியில்
மின்கட்டணத்தை பாதியாக குறைப்பேன்
என்று
உறுதியளித்த கேஜ்ரிவால் டெல்லி மக்கள் அனைவருக்கும் பாதியாக குறைக்காமல் நானுறு
யூனிட்
வரை பாதிக்கட்டணம் என்றும் மீதியை அரசு மானியமாக ஏற்றுக்கொள்வது என்பது
கேஜ்ரிவாலின்
நிர்வாகத்திறமையை
வெளிப்படுத்துவதற்கு பதிலாக
அரசு
பணத்தில் வாங்கிய டி.வி-க்களை இலவசமாக மக்களுக்கு வழங்கி மலிவு வழியில் ஓட்டு
வாங்கிய
கருணாநிதி,
அரசு பணத்தில் வாங்கிய மிக்சி, கிரைண்டர்களை மக்களுக்கு இலவசமாக வழங்கி வாக்குகளை
வஞ்சகமாக பெற்ற ஜெயலலிதா ஆகியோரின் வழியில் இலவசங்களை வேறு வடிவில்
அறிவித்திருக்கும் கேஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இந்த
நாட்டுமக்கள்
மக்கள் அனைவரையும் இலவசத்திற்கு
ஏங்கும்
கோமாளிகளாக மாற்ற நினைப்பத்துதான் இவரது கொள்கையா? இதற்காகத்தான் ஊடகங்கள்
இவருக்கு
பல்லாக்கு தூக்குகின்றனவா! இது உண்மையென்றால் இவர் இந்திய மக்களுக்கு
கேஜ்ரிவாலா????
போர்ஜரிவாலா??????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக