ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

உன்னைத்தான் தேடுகிறேன்...அ

   தேடல்—1
     அதிகாலையில் அகப்பட்டதை உணவாக கொடுத்து அழுக்கு மூட்டைகளை                                              முதுகில் ஏற்றி தன் கழுதையை ஆற்றுக்கு ஓட்டிச்செல்வதைப்போல         தன் குழந்தைகளின் முதுகில் புத்தகச்சுமையை ஏற்றி பள்ளிக்கு அனுப்பும் நவீன                    நாகரீக பெற்றோர் கூட்டத்தின் நடுவே மறைந்திருப்பாயோ என்று உன்னை அங்கும் தேடுகிறேன்.தமிழக மக்களை தற்குறிகள் ஆக விடமாட்டேன் என்று ஊருக்கு ஒரு பள்ளி(கோயிலை)கூடத்தை திறக்க பாதையோரம் பிச்சை எடுக்கவும் தயார் என்று சொல்லி ஊரெங்கும் பள்ளிகளைத்திறக்க காரணமான காலம் சென்ற முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாட்டில் வீதியெங்கும் வீற்றிருக்கும் டாஸ்மார்க் கடைகளுக்குள் போதைக்கு அடிமையானவர்கள் அணிவகுத்து செல்வதைப்போல தங்கள் ஒழுக்கத்தையும், வலிமையான வாழ்க்கை சிறப்புகளையும் சீர்கேடுக்க சிவப்புக்கம்பலம் விரித்து காசுக்காக கல்வியை விபசார விடுதிகளாக்கி விளம்பரப்படுத்தும் கான்வென்ட் கல்விச்சாலைக்குள் சிறை வைக்கப்பட்ட சின்னஞ்சிறு சிறார்களின் மத்தியில் உன் சிவந்த முகத்தை தேடுகிறேன்.     படிப்பை சொல்லிக்கொடுக்க ஒரு கட்டணம், பள்ளி வளச்சிக்கு ஒரு கட்டணம், பேருந்துக்கு ஒரு கட்டணம், பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு ஒரு கட்டணம், விழாவிற்க்கு ஒரு கட்டணம், வீட்டுப்பாடத்தை செய்யாமலிருந்தால் ஒரு கட்டணம், சீருடைக்கு ஒரு கட்டணம், சிறப்புத்தேர்வுக்கு ஒரு கட்டணம், கல்வி சுற்றுலாவுக்கு ஒரு கட்டணம் கடன் வாங்கியாவது இந்த கட்டணங்களை செலுத்தி தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ளும் பெற்றோரிடம் வாங்கிய கட்டுகட்டான பணத்தில், சொற்பத்தொகையை சம்பளமாக பெற்ற வேதனையில் கடமைக்காக இல்லாமல் கடனுக்காக கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு முன்னால், பெற்றோரின் போலி கௌரவத்தின் புகழுக்காகவும், கல்வி நிறுவனக்களின் பணப்பேயின் பசியை தீர்க்கவும், கடனுக்காக கத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கர்ஜனைக்கு கட்டுப்பட்டவர்களாக,    ஆற்றுக்குள் அகமகிழ்ந்து நீந்தி விளையாடும் மீன்குஞ்சுகளைப்போல, வானில் சிறகு விரித்து பறக்கும் சிட்டுக்குறிவிகளைப்போல, வனத்தில் துள்ளிக்குதித்து விளையாடும் மான்குட்டிகளைப்போல, நந்தவனத்தில் நளவெண்பா பாடும் குயில்களைப்போல அனைத்தையும் இழந்து அடிமைகளாக அமர்ந்திருக்கும் அப்பாவிகளின் மத்தியில் உன்னை இப்பாவி தேடுகிறேன்.    தன் பிறப்பை பணயம் வைத்து ஒரு மழலையின் பிறப்புக்கு உயிர் கொடுத்த தாய், அந்த மழலை அம்மா என்று சொன்ன முதல் வார்த்தைக்கு ஆயிரம் முத்தங்களை அள்ளித்தந்த தாய், மலடி எனும் மரண வார்த்தையை உடைத்தெறிய ஒரு குழந்தையை பெற்ற தாயும், உழைத்து களைத்துப்போய் வீடு வந்த தந்தையை பார்த்து அறைகுறையாய் அப்பா என்று அழைத்தவுடன் அத்தனை சோர்வுகளும் பறந்து போய் சொர்க்கத்துக்கே செல்லும் தந்தை, சொகப்புயலில் சிக்கித்தவிக்கும்போது தன் சின்னஞ்சிறு மழலையின் கிளிப்பேச்சை கேட்டவுடன் மலையளவு தைரியத்தை மனதிற்குள் உருவாக்கிக்கொள்ளும் தந்தையும் இன்று எதிகாலத்தில் அனுப்விக்கத்துடிக்கும் ஆடம்பர வாழ்க்கைக்காக, நிகழ்காலத்தில் தங்கள் பிள்ளையை ஆங்கில பள்ளியில் அடமானம் வைத்த கூட்டத்துக்குள் உன்னைத்தேடுகிறேன் உன்னை மட்டுமே தேடுகிறேன்.                                            தேடல் தொடரும்.... 


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

உன்னைத்தேடுகிறேன்....

   உன்னைத்தான் தேடுகிறேன் உன்னை மட்டுமே தேடுகிறேன்.பாறைக்குள் பதுங்கியிருக்கும் தேரையைப்போல படித்தவர் கூடினாலும், பாமரர் கூடினாலும் கூட்டத்துக்குள்ளே உன்னைத்தேடுகிறேன். தேய்ந்துபோன தேகம் கலைத்துப்போகும்போது புறக்கண்களை மூடி புரண்டு படுத்தாலும் அகக்கண்கள் உனைத்தேடியே அலைபாய்கின்றன  இறந்தவர்களை புதைக்க இடமில்லாமலும் எதிர்கால வாழ்க்கைக்கு வழி தெரியாமலும் விடுதலைக்காக விரக்தியோடு காத்திருக்கும் இலங்கைத்தமிழ் மக்களைப்போல. அதோ நடக்க முடியாமல் நாலு திசைகளிலும் நன்மை செய்துகொடிருக்கிறதே அந்த பச்சைமரங்கள் அவைகளை நாற்றாக நடும்போது காற்றோடு வந்த உன் சுவாசம் என் சிந்தனை சிறகோடு வளர்ந்துகொண்டே வாழ்கிறது நட்டுவைத்த நாற்றுகள் எல்லாம் மரமாகி மக்களுக்கு சேவை செய்யும்போது நீ மட்டும்  மறைந்து போனது மகா தவறல்லவா. தவறிப்போன குழந்தைக்காக தாய் தவமிருப்பதைப்போல சுயநலம் கொண்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை தேடி அலைமோதும் மழை வெள்ளத்தைபோல பொழுது புலர்ந்து பொழுது மறையும் வரை வண்டுகள் தேடும் மலர்களைப்போல தன் சுய தேவைகளையும், சுகபோக கூடங்களையும் இந்த மனித சமுதாயத்திற்குள் நான் உன்னைத்தேடுகிறேன்.... உன்னை மட்டுமே தேடுகிறேன்.

                                    தேடல் தொடரும்...   

திங்கள், 12 ஆகஸ்ட், 2013