புதன், 2 நவம்பர், 2011

தமிழனால் தலைகுனியும் தமிழ்

பிழைப்புக்காக புறப்பட்டோம் பிடித்தோம் ஒரு தீவை
உழைப்பை கொடுத்தோம் உருவானது இலங்கை
உரிமையை பெற்றதோ கருனகக்குட்டம் சிங்களம்
உரிமைக்காக உயிர்ப்பலி கொடுத்ததோ ஏராளம்
எங்கள் உரிமைக்காக போராடியவர்களுக்கு புகலிடம் தந்த
அன்னைத்தமிலகத்தின் அருமைப்பிரதமரின் மரணத்திற்கு
எங்கள் மறவர்கள் காரணமானதால், தவறு செய்த தனயனை
கொன்றான் என்பதற்காக தம்பியை எந்நாளும் தமிழுலகம்
மன்னிக்க கோரியபோது "மறப்போம் மன்னிப்போம்"
என்று ஏற்றுக்கொண்ட தமிழினமே இன்று நாதியற்ற
எங்களுக்காக ஒற்றுமையை ஓரணிப்புயலாய் போராடாமல்
அரசியல் அரவாநிகளால் நாளுக்கொரு குப்பைகுலங்கலாக
குக்குரல் போட்டு கோமாளித்தனமான போராட்டங்களை
செய்வதால் எங்களுக்கென்ன நன்மை?
ஆஸ்திரேலியாவில் ஐந்து மாணவர்கள் அசிங்கப்பட்டதர்க்காக
பாராளுமன்றமே கண்டன குரல்களால் வெடித்து மாணவர்களின்
மானம் காக்கப்பட்டதே லட்சக்கணக்கான உயிர்களை இழந்த
எங்களுக்காக உலக நாடுகளே உரிமைக்குரல் கொடுக்கும் பொது, உன் இனத்துக்காக உன் தேசத்தை உன்னால்
பணியவைக்காம்டியாவிட்டால் நீ உயிரோடு இருந்தாலும்
ஒன்றுதான், உயிரோடு இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
உழைப்பது நானாயினும் உயர்வது -எந்தன்
சமுதாயமாக இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை: