டெல்லி பேருந்தில் பாலியல் பலாத்காரத்தால் மரணமடைந்த மாணவியின் மரணம்
இந்த இந்திய சமுதாயத்திற்கு கற்றுத்தரும் பாடம் என்ன ?
இந்த கொடுனமையான சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வது யார் ?
1.பெற்றோர்-
தங்கள் இமேஜை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற. தங்கள்
அந்தஸ்த்தை அடுத்தவர்க்கு வெளிப்படுத்த கல்வி கற்கும் தங்கள் பிள்ளைகளுக்கு
செல்போன் வாங்கித்தருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
செல்போன் வான்கித்தரும்போது கேமரா இன்டெர்நெட் போன்ற வசதிகள்
கொண்ட கேமராவை வாங்கி கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தால் வரும்
விளைவுகள் ஒருநாள் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும்
2.இளம்பெண்கள்-
பணிகளுக்கு சென்று பொருளாதாரத்தில் தாராளமாக
இருக்கும் பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் நச்சுக்கலாசாரத்தில் மயங்கி தன
அங்கங்களின் அழகை அடுத்தவர் பார்க்கவேணும் என்பதற்காக ஆபாசமாக ஆடை
அணிவது நட்பு என்றபெயரில் அறிமுகமில்லாத ஆண்களுடன் அலைவதும் .
3.அரசாங்கம் ---
ஆட்சியாளர்கள் தங்கள் சுய லாபத்துக்காக தொலைதொடர்புத்துரையில்தனியார்க்கு தாரை வார்த்ததன் காரணமாக நடைபெறும் நச்சு வியாபாரங்களை
என்னவென்று சொல்வது பட்டியலிட்டால் பாவிகளுக்கு மன்னிப்புமுண்டோ ?
அ.
18- வயதிர்க்குர்ப்பட்டோர்க்கு அவர்களது தந்தையின் அல்லது தாயின் பெயரில்தான்செல்போன் இணைப்பு (சிம் கார்டு) வழங்கப்பட வேண்டும்.
பள்ளி கல்லூரிகள் தங்கள் மாணவ மாணவிகளின் தினசரி வருகை மற்றும் பிற
தகவல்களை தினசரி சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ் )
வழியாக தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் .
ஆ.
திரைப்பட துறையில் உள்ள சென்சார் போர்டை புதுப்பித்து கடுமையாக்கவேண்டும்.அதேபோல் தொலைக்காட்சியையும் கடுமையான சட்டங்கள் கொண்டு அவைகளில்
விளம்பரம் மருத்துவம் நிகழ்ச்சி என்ற பெயரில் நுழையும் ஆபாசத்தை அறவே
தடுக்க வேண்டும் .
இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில்
பாலியல் கொடுமைக்கு தூக்கு தண்டனையே கொண்டுவந்தாக் வந்தாலும்
இது போன்ற குற்றங்கள் நித்தம் நித்தம் நடப்பதை தடுக்க முடியாது.