வியாழன், 16 ஆகஸ்ட், 2012

'மயிலின் சிறகுகளான ' தோகைகள்

பத்தொன்பதெட்டிரண்டாயிரத்துப்பனிரெண்டு
ஞாயிருபெயர்கொண்ட நன்னாளில்
கோயம்புத்தூர் குறிச்சிக்கருகே மண்
மணக்கும் மாச்சம்பாளயத்தில் மனம்
மயக்கும் ' மயில் இளந்திரையன் ' எழுதிய
முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா.
        'மயிலின் சிறகுகள் ' என் சிந்தையில்
தேடியபோது சில அர்த்தங்கள் அகப்பட்டன
எத்தனை சாதிகள் கொண்ட தமிழகம் -அத்தனையும்
தமிழ் கலாசார வட்டத்துக்குள் ஒன்றாக...
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல
எத்தனை கட்சிகள் கொண்ட தமிழகம் -அத்தனையும்
தமிழ் பெயரைச்சொல்லி வாழ்கிறது ....
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல

எத்தனை விரோதம் தமிழகம் மீது -அத்தனையும் 
அழிவது தமிழனின் சகிப்புத்தன்மையால் ....
வண்ணங்கள் அனைத்தும் மயிலின் சிறகுகளுக்குள்
ஒன்றாக குடிகொண்டிருப்பதைப்போல இந்த
' மயிலின் சிறகுகள் '  முகிலின் முகவரியைப்போல 

அகிலமெங்கும் தவழ்ந்துசென்று ஆயிரமாயிரம் 
கவிதை நூல்கள் நூற்கும் கவிஞனாக அன்பிற்குரிய 
' மயில் இளந்திரையன் ' திசையெட்டும் வெற்றிகான 
வேண்டுமென்று வாழ்த்தும்.
                                 மாச்சம்பாளையம் மாரியப்பன்.